இரு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் ; தேடப்பட்ட மூவரில் ஒருவர் கைது

25 May, 2020 | 09:44 PM
image

யாழ்ப்பாணம், குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் இன்று பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த மே 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொதுஇடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியிருந்தனர்.

சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர். 

இந்நிலையில், தேடப்பட்டுவந்த மூவரில் ஒருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவரும் தேடப்படுகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38