ஒரு இலங்கையருடன் வந்த விமானம் ! கட்டாரிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை கைவிடப்பட்டது

25 May, 2020 | 09:27 PM
image

கட்டாரிலிருந்து இலங்கை பிரஜைகளை  நாளை 26 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறைக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

குவைத்திலிருந்து இலங்கைக்கு கடந்த (19/05) 19 ஆம் திகதி அழைத்துவரப்பட்ட இலங்கை பிரஜைகள் 649 பேரில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டாரின் டோகா நகரிலிருந்து 273 இலங்கையர்கள் நாளை காலை 5.43 மணியளவில், ஸ்ரீ லங்கா விமானசேவைக்குச் சொந்தமான விமானத்தில் அழைத்துவர ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென் ஆபிரிக்காவிலிருந்து நாடுதிரும்பமுடியாமல் கடந்த இரண்டு மாதங்காளாக சிரமங்களுக்கு உள்ளான இலங்கையர் ஒருவர் எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் இன்று மாலை 6.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவர் எமிரேட்ஸ் ஏயார்லைன்ஸில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியற்றிவரும் நிலையில், மேலதிக பயிற்சிக்காக தென் ஆபிரிக்காவிற்கு சென்றிருந்த போது கொரோனா நெருக்கடி காரணமாக நாடுதிரும்ப முடியாது இருந்தார். 

இதனையடுத்து இன்று மாலை டுபாயிலிருந்து இலங்கையின் கட்டுநாயக்க விமானநிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21