யாழ். மத்திய பஸ் நிலையத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியேயான பஸ் சேவைகள் நாளை தொடக்கம் இடம்பெறும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு காரைநகர் சாலையிலிருந்து புறப்படும் பஸ் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் தரித்து நின்று அதிகாலை 5.45 மணிக்கு நீர்கொழும்பு வரையான சேவையை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பஸ்கள் நீர்கொழும்பு வரை அனுமதிக்கப்படும் என்று பயணிகள் போக்குவரத்து அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் நாளை அதிகாலை 5.45 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

அத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு – அக்கரைப்பற்று மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து நாளை பஸ் சேவைகள் இடம்பெறும் என்றும் வடபிராந்திய போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.