ஐரோப்பாவில் முதல் முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து ஆஸ்திரியா மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டில் தலைநகர் வியன்னாவிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த வாரம்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியது என்று மருத்துவ மையம் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

45 வயதான கொரோனா வைரஸ்  தொற்று பெண் நோயாளி ஒருவருக்கே இவ்வாறு நுரையீரல் அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் மட்டுமே உயிர் பிழைத்தார் எனவும், இப்போது  குணமடைந்து வருவதாகவவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்பு நோயாளி நோய்கள் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்.  வைரஸ் தொற்று ஏற்படட் சிறிது நேரத்தில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"நிலைமை நம்பிக்கையற்றதாக இருந்தது," நுரையீரல் ஒரு தொகுதி செயலிழந்தது.

இந்த அறுவை சிகிச்சை "மிகவும் சிக்கலானது" ஆனால் வெற்றி அளித்துள்ளதாக மருத்துவமனை மேலும் தெரிவித்துள்ளது.

“அனைத்து உறுப்புகளும் செயல்படுகின்றன, நாங்கள் மிகவும் திருப்தி அடைகிறோம். ஆனால் மருத்துவமனையில் இருந்து அவளை வெளியேற்ற இன்னும் நீண்ட காலம் எடுக்கும். " என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.