நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் மாத்திரம் 41 கொரோனா தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதில் 40 பேர் குவைத் நாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் என்பதுடன் ஒருவர் டுபாயில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவராவார்.

இதேவேளை, இன்றையதினம் குவைத்திலிருந்த வந்து திருகோணமலையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்த 51 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,182 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 695 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 477 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 79பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.