வவுனியா கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்பார்வையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 35,000 மில்லிலீற்றர் கோடாவுடன் (ஸ்பிறிற்) சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா பொலிஸ் பிரிவிலுள்ள கோவில்புதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபொலிஸார் கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 35000 மில்லிலீற்றர் கொண்ட கோடாவினையும் (ஸ்பிறிற்) அப்பகுதியை சேர்ந்த 55வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM