திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கொரோனா தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

குவைத்திலிருந்து நாடு திரும்பி திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த கம்பஹா பயாகல பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண் சுகவீனமுற்ற நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் இரத்த மாதிரிகள் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதன்போது குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.