பிரித்தானியாவைச் சேர்ந்த நபரொருவர் தனது விந்தணுக்களைத் தானமாக வழங்கியதன் மூலம் கடந்த இரு வருட காலப் பகுதியில் 54 குழந்தைகளுக்கு தான் தந்தையாகியுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.
டெக்கிலன் ரோனி (43 வயது) என்ற மேற்படி நபருக்கு 4 வெவ்வேறு பெண்கள் மூலம் சொந்தமாக 8 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் தனது விந்தணுக்களைப் பெண்களுக்கு தானமாக வழங்குவதற்கு என இணையத்தள பக்கத்தை ஆரம்பித்ததிலிருந்து மட்டும் தான் இதுவரை 17 ஆண் குழந்தைகளுக்கும் 14 பெண் குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளதாக அவர் கூறினார்.
மேற்படி குழந்தைகளுக்கு மேலதிகமாக தன்னிடம் விந்தணுக்களைத் தானமாகப் பெற்ற மேலும் 15 பெண்கள் கர்ப்பமாகவுள்ளதாகவும் அவர்களும் விரைவில் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ளதாகவும் ரோனி தெரிவித்தார்.
ரோனியின் இந்த அறிவிப்பானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் பல தரப்பினரும் அவரது முறையற்ற செயற்பாடு குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ரோனி விபரிக்கையில், “ நான் இதனால் வெட்கமடையவில்லை. நான் பெண்களுக்கு தமக்கென குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள உதவி வருகிறேன்“ என்று கூறினார்.
தனது சேவை மூலம் 24 மணி நேரத்தில் 3 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“கருமுட்டைகளை தானம் செய்யும் பெண்கள் புனிதர்கள் போன்று நடத்தப்படுகின்றனர். ஆனால் விந்தணுக்களைத் தானம் செய்யும் எம்மைப் போன்றவர்கள் மோசமான பையன்களாக நடத்தப்படுகின்றனர்" எனத் தெரிவித்த ரோனி, தான் பெண்களின் குடும்ப பின்னணி மற்றும் அவர்களால் குழந்தையொன்றை சிறப்பாக வளர்க்க முடியுமா என்பன தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்த பின்னரே விந்தணு தான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
தான் மேற்படி சேவையை வழங்குவதற்காக 200 மைல் தூரம் வரை பயணித்து வந்துள்ளதாக தெரிவித்த அவர், தான் இதற்காக விந்தணுக்களைத் தானமாகப் பெறும் பெண்களிடம் பயணச் செலவையும் ஏனைய செலவுகளையும் மட்டுமே வசூலித்து வருவதாகவும் விந்த ணுக்களுக்கென தனிப்பட்ட கட்டணங்கள் எதனையும் அற விடுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM