(எம்.ஆர்.எம்.வஸீம்)
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துவிட்டு தேசிய உற்பத்திகளை பாதுகாக்கவே இதனை மேற்காகொண்டதாக அரசாங்கம் மக்களை ஏமாற்றிவருகின்றது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமனற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன் விவசாயிகளை பாதுகாக்க எந்த வேலைத்திட்டமும் இல்லாமல் எவ்வாறு தேசிய உற்பத்தியை அரசாங்கம் பாதுகாக்கப்பாபோகின்றது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
காலியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது. அதனால் குறிப்பிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் ரின் மீன், பருப்பு போன்ற பொருட்களினதும் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பாரியளவில் கஷ்டப்படப்போகின்றனர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது மக்களை நடுத்தெருவில் விட்டிருக்கின்றது.
அத்துடன் தேசிய உற்பத்தியை பாதுகாக்கவே பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த கூற்றானது சிறுபிள்ளைத்தனமானதாகும். விவசாயிகளுக்கு உரிய காலத்துக்கு உரம் இல்லாமல் இருக்கின்றது. அதனால் விவசாயிகள் வீதிக்கிறங்கியுள்ளனர். விவசாயிகளை பாதுகாக்க முடியாத அரசாங்கம் எப்படி தேசிய உற்பத்தியை பாதுகாக்கப்போகின்றது?. விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை.
மேலும் அத்தியாவசிய இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிப்பானது, தேசிய உற்பத்தியை பாதுகாப்பதற்காக என தெரிவிக்கின்றபோதும் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. விவசாயிகளுக்கு உரிய காலத்துக்கு உரத்தை வழங்காமல் எப்படி தேசிய உற்பத்தியை மேற்கொள்வது.
அதனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கின்து. அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கே அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துவிட்டு தேசிய உற்பத்தியை பாதுகாக்கப்போவதாக மக்களை ஏமாற்றும் வகையில் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM