(இரா.செல்வராஜா)

நாட்டில் நாளை முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு கடும் மழையுடனான காலனிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தழம்பல் நிலை காரணமாக நாடுமுழுவதிலும் தற்போது நிழவுகின்ற மழையுடனான கால நிலை நிழவும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

வானிலை தொடர்பாக  அதிகாரி மேலும் தெரிவித்ததாவது,

நாளை செவ்வாய் கிழமை முதல் 29 ஆம் திகதி வரை மத்திய, சப்பிரகமுவ, ஊவா, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில்  மழை அதிகரித்து காணப்படும்.

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி மாத்தறை அகிய மாவட்டங்களில் 100 மில்லி மிற்றருக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும்.

நாட்டுக்கு மேலாக 40 கிலோ மீற்றருக்கும் அதிகமாக காற்று வீசுவதுடன், கடலோர பகுதிகளில் 70 கிலோ மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றார்.