கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Colombo Stock Exchange (@CSE_Media) | Twitter

அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.

நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.