எதிர்வரும் பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தக்கூடிய புதிய முறைகளை முன்மொழிந்து  தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை வழங்கவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அரசியல் கைதிகள் விடுதலை: அமைச்சரவை ...

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், தற்போதுள்ள நிலைக்கு ஏற்றவாறான தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் முன்மொழிவுகளைச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகளிடமும் கோரியிருக்கிறது. 

இதுகுறித்து வெளியிட்டிருக்கும் கருத்திலேயே பிமல் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

கொரோனா வைரஸ் பரவலால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் பொதுத்தேர்தலில் அறிமுகப்படுத்தக்கூடிய புதிய முறைகளை முன்மொழியுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. 

எனினும் இவ்விடயத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதன் முன்மொழிவுகள் மூலம் எம்மை மேலும் தெளிவுபெறச் செய்யவேண்டும் என்று கேட்டிக்கொண்டிருக்கிறார்.