நாட்டில் இன்றைய தினம் மேலும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இதுவரை கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இறுதியாக அடையாளம் காணப்பட்ட 7 தொற்றாளர்களும் குவைத் நாட்டிலிருந்து வருகை தந்தவர்களென்றும், மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 444 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 97 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.