நாட்டில் இன்றைய தினம் மேலும் 21 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 695 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 313 கடற்படையினர்  குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,141 ஆகும்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 437 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 97 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.