உள்ளூர் துப்பாக்கியுடன் வவுணதீவில் ஒருவர் கைது 

By T Yuwaraj

25 May, 2020 | 02:40 PM
image

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக  வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை சட்ட விரோதமாக வைத்திருந்த ஒருவரை கைதுசெய்ததுடன் துப்பாக்கியை மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right