97 பேரை பலியெடுத்த பாகிஸ்தான் விமான விபத்திற்கு விமானியின் அலட்சியமே காரணமாம்

Published By: Digital Desk 3

25 May, 2020 | 02:40 PM
image

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக பாகிஸ்தானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை விமானி மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் பயணத்தை ஆரம்பித்த தினத்தன்று மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும்.

2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 கடல் மைல் (Nautical mile) தொலைவில் விமானம் பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது.

இதனைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, சரியாக இருப்பதாக கூறி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.

கராச்சி விமான நிலையத்தை அடைய 10 கடல் மைல் தூரம் இருந்தபோது, விமானம் பறக்கும் உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது.

எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த போதும், அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய விமானி, விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-13 12:29:24
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09
news-image

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-12 13:01:57