மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான புதிய கட்­சியின் முத­லா­வது மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) கொழும்பில் நடத்­தப்­ப­ட­வி­ருப்­ப­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

இதற்­கான ஏற்­பா­டு­களை முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் ஆனால் பஷிலின் தலை­யீட்டை பொது எதிர்க்­கட்­சி­யி­னரில் பெரும்­பா­லானோர் விரும்­ப­வில்­லை­யென்றும் அவ் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

இது தொடர்­பாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை இலக்­காகக் கொண்டு மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையில் புதிய அரசியல் கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை பொது எதிர்க்­கட்­சி­யினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதற்­க­மைய கிராம, நகர மட்­டங்­களில் மக்­களை சந்­தித்து புதிய கட்­சிக்­கான உத்­தி­யோ­கத்­தர்கள் குழுவும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இவ்­வாறு புதிய கட்­சி அமைக்கும் பணிகள் மும்­மு­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷவும் இச் செயற்­பா­டு­களில் தன்னை தீவி­ர­மாக ஈடு­ப­டுத்திக் கொண்­டுள்ளார். ஆனால், பஷிலின் தலை­யீட்டை பொது எதிர்க்­கட்­சியை சேர்ந்த பலர் விரும்­­பாது அவர்­க­ளது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் அறி­ய­வ­ரு­கி­றது.

இந்­நி­லையில் புதிய கட்­சியின் முத­லா­வது தேசிய மாநாடு அடுத்த மாதம் கொழும்­பில நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் அறி­ய­வ­ரு­கி­றது. பொது எதிர்க்­கட்­சிக்கு ஆத­ரவை வழங்கும் சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த முன்னாள் உள்­ளூ­ராட்சி சபை உறுப்­பி­னர்கள் உட்­பட முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­வ­தற்கு வாய்ப்­புகள் வழங்­கப்­பட மாட்­டாது.

இந்­நி­லை­யி­லேயே புதிய அர­சியல் கட்­சியை அமைத்து தேர்­தலில் போட்­டி­யிடும் நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.

இதே­வேளை, மஹிந்த ராஜ­ பக் ஷ தலைமையில் எத்­தனை கட்­சி கள் அமைக்­கப்­பட்­டாலும் அஞ்சப் போவ­தில்லை என்றும், சுதந்­திரக் கட்­சி ­யி­லி­ருந்து கொண்டு புதிய கட்சியை ஆரம்பிப்போர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதில் எந்த விதமான தராதரமும் பார்க்கப்பட மாட்டாதென்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.