வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை 11 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் திடீரென வவுனியா குளக்கட்டு வீதியூடாக பூந்தோட்டத்தை நோக்கி சென்றிருந்தனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதோடு குளக்கட்டு வீதியால் சென்றவர்களையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டிருந்ததாக தெரியவருகின்றது.