திருமண நிகழ்வு குறித்து முக்கிய அறிவித்தல் : கட்டுப்பாடுகள், வரையறைகள் இவைதான் !

Published By: Digital Desk 3

25 May, 2020 | 01:21 PM
image

நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபவங்கள மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் இயல்புநிலையை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் இத்தடை நீக்கப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.

திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை  அதாவது திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோர் 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

வைபவங்களின் போது முகக்கவசம் அணிவதும் அவசியம் ஏன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்களின்படி, திருமண வரவேற்பு வைபவங்களில் அதிகபட்சம் 100 விருந்தினர்கள் மாத்திரமே பங்குபற்றலாம்.

40 வீத இருக்கைகளைக் கொண்ட திருமண மண்டபங்களுக்கே விருந்தினர்களை  அழைக்க முடியும்.

புதிய வழிகாட்டுதல்களின் கீழ் மணமக்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் (3 அடி) இடைவெளி பேணப்பட வேண்டும்.

  • கட்டிப்பிடிப்பதும், கைகுலுக்கவோ அனுமதிக்கப்படக் கூடாது.

  • அனைத்து விருந்தினர்களும் முகக்கவசங்களை அணிய வேண்டும்.

  • ஒருவரையொருவர் எந்த விதமாகவும் தொட்டுக்கொள்ளாமல் வாழ்த்துகள் தெரிவித்தல்.

  • குழு புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கப்படக் கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27