அமெரிக்காவில் மிசூரியில் உள்ள சென்.லூயிஸ் நகரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் ஜெப்-வேண்டர்-லூ சுற்றுப்புறத்தில் கார் ஒன்றுக்குள் வைத்து பலமுறை துப்பாக்கியால் சுட்டப்பட்ட நிலையில் , பின்னர் வைத்தியசாலையைில் உயிரிழந்துள்ளார் என சென் லூயிஸ் போஸ்ட் டிஸ்பச் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மற்றுமொரு  நபர் துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். 

இதேவேளை, தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட ஒரு நபர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார். மேலும்  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகரில் இரவு தனித்தனியாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் அந்த துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது சிறுவன் மார்பில் துப்பாக்கிச் சூடுபட்டு கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.