இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளதோடு, கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் 4021 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 57,721 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் 1,635 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.

இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்தம் 16,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 111 ஆகும்.

மூன்றாவது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,056 ஆக உள்ளது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 858 ஆகவும் உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 5,407,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 2,168,563 பேர்  குணமடைந்தும், 345,059 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.