'ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலிருந்து வில­கு­வ­தற்கு போரா­டிய நீங்கள்  ஏன் இங்கு வந்தீர்கள்  ?' : நிகெல் பராஜ்ஜையிடம் ஜங்கர் (காணொளி இணைப்பு)

Published By: MD.Lucias

29 Jun, 2016 | 10:40 AM
image

“பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலி ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக நீங்கள் போரா­டி­னீர்கள். பிரித்­தா­னிய மக்­களும் வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர். அதன் பின் நீங்கள் எதற்­காக இங்கு (ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்­ துக்­கு) வந்­தி­ருக்­கி­றீர்கள்?" என ஐரோப்­பிய ஆணை­ யகத் தலைவர் ஜீன் கிளோட் ஜங்கர், நிகெல், ஐக்­கிய இராச்­சிய சுதந்­திர கட்­சியின் தலைவர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார். பெல்­ஜி­யத்தின் பிர­ஸல்ஸ் நக­ரி­லுள்­ள ஐரோப்­பிய ஒன்­றிய தலை­­மை­ய­கத்­தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை உரையாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

பிரித்­தா­னி­யா­வா­னது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லான தனது விலகல் குறித்து (பிறிக்ஸிட்) எவ்­வ­ளவு விரைவில் முடி­யுமோ அவ்­வ­ளவு விரை­வாக தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

பிரித்­தா­னி­யாவும் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் தொடர்ந்து நண்­பர்­க­ளா­க­வுள்­ள­தா­கவும் ஆனால் நிச்­ச­ய­மற்ற நிலை­மையைத் தவிர்ப்­ப­தற்கு பிரித்­தா­னியா அதன் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இந்­நி­லையில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து விலக கடந்த வாரம் பிரித்­தா­னியா வாக்­க­ளித்­த­தை­ய­டுத்து பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் முதல் தட­வை­யாக ஐரோப்­பிய ஒன்­றிய தலை­வர்­களை சந்­தித்துள்­ளார்.தனக்குப் பின் பத­வி­யேற்­ப­வ­ருக்கு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா வில­கு­வது தொடர்­பான பேச்­சு­ வார்த்­தை­களை முன்­னெ­டுக்க அனு­ம­திக் கும் வகையில் தான் பதவி வில­க­வுள்­ள­தாக டேவிட் கமெரோன் தெரி­வித்­துள் ளார்.

ஐரோப்­பிய ஒன்­றியம், லிஸ்பன் உடன்­ப­டிக்­கையின் 50 ஆவது விதி என்­ப­வற்­றி­லி­ருந்து நாடு வில­கு­வது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ முறைமை அடுத்து பிர­த­ம­ராக பத­வி­யேற்­ப­வரால் முன்­னெ­டுக்­கப்­படும் என்று அவர் கூறினார்.

இந்­நி­லையில் இது தொடர்பில் ஐரோப்­பிய ஆணை­யகத் தலைவர் ஜங்கர் கூறு­கையில், “நாம் எவ்­வ­ளவு விரைவில் முடி­யுமோ அவ்­வ­ளவு விரைவில் நிலை­மையை தெளி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. நான் ஒரு ஐரோப்­பிய பிரஜை என்ற வகையில், பிரித்­தா­னிய வாக்­கெ­டுப்பின் பெறு­பேறு குறித்து வருத்­த­ம­டை­கிறேன்" எனத் தெரி­வித்தார்.

இதன்­போது பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வெளியேறும் செயற்­கி­ர­மத்தை ஆரம்­பிக்­காத வரை உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பிக்க முடி­யாது என பிரான்ஸ், ஜேர்­மனி மற்றும் இத்­தா­லிய தலை­வர்­களால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த கருத்தை வலி­யு­றுத்தும் வகையில் அவ­ரது இந்த உரை அமைந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“நாங்கள் நீண்ட கால நிச்­ச­ய­மற்ற தன்­மையை அனு­ம­திக்க முடி­யாது. அத்­துடன் இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கும் இங்கு இட­மில்லை" என ஜங்கர் குறிப்­பிட்டார்.

"பிரித்­தா­னிய மக்­களின் விருப்­பத்­திற்கு மதிப்­ப­ளிக்­கப்­பட வேண்டும்.” என ஜங்கர் தெரி­வித்த போது அங்­கி­ருந்த ஐக்­கிய இராச்­சிய சுதந்­திர கட்­சியின் தலைவர் நிகெல் பராஜ் கைதட்டி வர­வேற்­ப­ளித்தார். பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரி­வ­தற்கு ஆத­ர­வாக ஐக்­கிய இராச்­சிய சுதந்­திர கட்சி தீவிர பிர­சாரம் செய்து வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

“பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலி ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக நீங்கள் போரா­டி­னீர்கள். பிரித்­தா­னிய மக்­களும் வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர். அதன் பின் நீங்கள் எதற்­காக இங்கு (ஐரோப்­பிய ஒன்­றிய தலை­மை­ய­கத்­ துக்­கு) வந்­தி­ருக்­கி­றீர்கள்?" என ஜங்கர் நிகெல் பராஜ்ஜை நோக்கி வினவினார்.

அத்துடன் ஐரோப்பிய தலை­மை­யகத் தில் உரையாற்றிய ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவர் மான்பிரெட் வெப்பர் நிகெல் பராஜ்ஜுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட் டார்.

“ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியில் மோசமான பொய்யர்களை பார்க்க முடி யும்" என அவர் குற்றஞ்சாட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தெற்காசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம்: 'அமெரிக்காவிற்கே முதலிடம்'...

2026-02-13 14:26:43
news-image

இம்ரான் கானின் வலது கண்ணில் 85...

2026-02-13 12:24:39
news-image

சீனாவின் மீன்பிடி படகை கைப்பற்றியது ஜப்பான் 

2026-02-13 12:42:27
news-image

திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!...

2026-02-13 11:39:38
news-image

ரஷ்ய வான்வழித் தாக்குதலால் உக்ரேனில் மின்சார...

2026-02-13 11:20:19
news-image

16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த...

2026-02-13 10:44:56
news-image

பங்களாதேஷ் தேர்தலை இரத்து செய்ய வேண்டும்...

2026-02-13 10:21:02
news-image

பாராளுமன்றத் தேர்தல்: பங்களாதேஷ் தேசியக் கட்சிக்கு...

2026-02-13 09:39:14
news-image

டாசன்ஸ் க்ரீக் நட்சத்திரம் ஜேம்ஸ் வான்...

2026-02-12 16:07:54
news-image

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

2026-02-12 15:18:01
news-image

இந்தியா - பாகிஸ்தான் போரில் 10...

2026-02-12 13:55:34
news-image

பங்களாதேஷ் நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிய...

2026-02-12 12:46:56