கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் இன்று காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர். 

இன்று காலை 5.50 மணியளவில் குறித்த விமானம், 181 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து இன்று அழைத்துவரப்பட்ட 181 பேரும் 2 ஆவது குழுவினர் என்பதுடன் ரஷ்யாவில் இருந்து 261 பேரடங்கிய முதலாவது குழுவினர் கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.