ர‌ஷ்யாவில் தனியார் வைத்தியசாலை ஒன்றில ஏற்பட்ட தீயில் சிக்குண்டு 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ர‌ஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜெலெனோடோல்க் நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே குறித்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையின் இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. 

பாரிய சுவாலையுடன் எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வைத்தியசாலை முழுவதிலும் பரவியது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

வைத்தியர்கள், தாதியர் மற்றும் நோயாளிகள் அலறியடித்தபடி வைத்தியசாலையை விட்டு வெளியேறினர். ஆனாலும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

இந்த தீவிபத்தில் 2 பேர் பலத்த தீக்காயங்களுடன் உயிர்தப்பினர். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.