இணையத்தை கலக்கும் ஒரு வயதுடைய சமையல்காரர் 

Published By: Digital Desk 3

24 May, 2020 | 09:46 PM
image

கொரோனா வைரஸ் பூட்டுதல் உலகெங்கிலும் உள்ள பலருக்கு வீட்டிலேயே சமையல் செய்யவேண்டிய நிலை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் ஒவ்வொரு நாளும் விதவிதமாக சமைத்து அசத்தி, அவர்களின் சமையல் குறிப்புகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  ஒரு புதிய சமையல்காரர் சமூக வலைத்தளத்தில் புயலை உருவாக்கியுள்ளார் .

ஒரு வயதான சமையல்காரர் பெப்ரவரி மாதம் தொடங்கிய தனது சமையல் பயிற்சிகளான "கோபே ஈட்ஸ்" (Kobe Eats) இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1.4 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

“ ஹாய் நான் செஃப் கோபே. நான் சமையலறையில் சமைக்கவும், சாப்பிடவும், ஆராயவும் விரும்புகிறேன்! ” என அவரது இன்ஸ்டாகிராம்  சுயவிபரத்தில்  கூறப்பட்டுள்ளது.

அவர் பல்வேறு சமையல் குறிப்புகளைக் காட்டும் அவரது பெரும்பாலான வீடியோக்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளன. ஒரு வீடியோ 3.4 மில்லியன் முறை பார்வையிடப்பட்டு காணப்பட்டுள்ளது.

கோபேக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், "எதையும் கொண்ட சீஸ், ஏனெனில் அவர் அதை சாப்பிட வேண்டும்," என்று அவரது தாயார் ஆஷ்லே வியன் சி.என்.என் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் பதிவிடுவது பெப்ரவரியில் தொடங்கியது.

அவரது சமையலறை உற்சாகத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

ஏப்ரல் 15 வரை அவருக்கு வெறும் 200 பின்தொடர்பவர்கள் இருந்தனர், ஆனால் தற்போது திடீரென்று அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் நேரத்தில், தங்கள் மகன் இவ்வளவு பேரை மகிழ்ச்சியடையச் செய்கிறான் என்று வியன் மற்றும் கோபேயின் தந்தை கைல் பெருமிதம் கொள்கிறார்கள்.

https://www.instagram.com/p/B__Rm3mhDJD/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

முக்கிய செய்திகள்

icon-left
icon-right