இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 3

24 May, 2020 | 08:46 PM
image

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உரும்பிராய் பகுதியில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் உரிய முறையில் முகக்கவசம் அணியாதிருந்தனர்.

அதனை சரியான முறையில் அணியுமாறு இராணுவத்தினர் கூறிய போது இரு தரப்புக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் அங்கிருந்து பயணிக்கும் போது இராணுவத்தினரை நையாண்டி செய்ததாகத் தெரிவித்து துரத்திச் சென்ற இராணுவத்தினர், வழிமறித்துத் தடுத்தனர்.

மூவர் மீதும் இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூவரும் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர். என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் சான்றுப்பொருளாக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்கள் மூவரை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது...

2024-12-10 01:48:28
news-image

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர்...

2024-12-10 01:45:13
news-image

இன்று செல்வத்தை சந்திக்கிறார் கஜேந்திரகுமார்

2024-12-10 01:39:10
news-image

புதிய அரசாங்கமும் மனித உரிமைகள் விடயங்கள்...

2024-12-10 01:36:55
news-image

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக 1 கோடி 10...

2024-12-10 01:12:24
news-image

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால...

2024-12-10 01:03:09
news-image

அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல்...

2024-12-10 00:53:34
news-image

தேங்காய் ஏற்றுமதி செய்து இலாபமடைய வர்த்தகர்கள்...

2024-12-09 20:37:12
news-image

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து 72 கோடி ரூபாவை...

2024-12-09 17:09:44
news-image

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை...

2024-12-09 20:47:19
news-image

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி

2024-12-09 20:40:05
news-image

ரத்வத்தவின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

2024-12-09 20:31:59