ஈரானில் 107 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வயோதிபப் பெண் ஈரானின் மத்திய நகரமான அராக்கில் உள்ள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு தற்போது வெளியேறியுள்ளார்.

"வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் அவர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வென்றுள்ளார்“ என்று செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 133,521 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7,359 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.