கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 ஆவது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன.
இதனால் பரந்தன் பூநகரி வீதியின் ஊடான கனரக வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
இரும்புக்காக திருடப்பட்டிருந்த பாலத்தின் பாகங்களின் பெறுமதி 10 தொடக்கம் 15 மில்லியன் வரையாகும் என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் தெரிவித்திருந்தார்.
திருடப்பட்ட பாலத்தின் பாகங்கள் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள பழைய இரும்பு விற்பனை நிலையம் மற்றும் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு அண்மையாக அமைந்துள்ள பழைய களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலிஸார் இதுவரை முக்கிய சந்தேக நபர்கள் எவரையும் கைது செய்யவில்லை.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM