(இரா.செல்வராஜா)
திறைசேரியில் இருந்து மானியம் பெறாமல் திறைச்சேரிக்குப் பணம் அனுப்பும் நிறுவனமாக போக்குவரத்துச்சபையை மாற்றியமைக்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சபை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த வேண்டுகொளை விடுத்தார்.
இந்தக் கலந்துரையடலில் மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க பிரதம நிறைவேற்று அதிகாரி சாகரஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயகம் அத்துலகுமார உட்பட பணிப்பாளர் சபையினரும் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரரையாடலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்ததாவது,
பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் போக்குவரத்துச்சபை இயங்க வேண்டும்.
போக்குவரத்துசபையில் சுமார் 4,500 க்கு மேற்பட்டவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, போக்குவரத்துச் சேவையை திறம்பட நடத்த வேண்டும். திறைசேரியில் இருந்து பணம் பெறும் நிறுவனமாக போக்குவரத்துச்சபை இருக்கக் கூடாது. இச்சபையை திறைசேரிக்கு பணம் அனும்பும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்களுக்கு மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். பாடசாலை பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடும் போது பொலிசாரினால் முன்னுரிமை வழங்கக் கூடியதாக இருக்கும். போக்குவரத்து சபையில் ஊழல், திருட்டு,இ மோசடி ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM