ஹொங்கொங்கில் பிரிவினைவாதத்தை ஒடுக்கும் வகையில் அங்கு தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டுவரும் சீன அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும் மற்றும் கொரோனா வைரஸ் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்திற்குள் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் எட்டுக்கும் மேற்பட்டோர் கண்ணீர்ப்புகையில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.
காஸ்வே விரிகுடாவைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடத் தொடங்கினர், ஹொங்கொங் தீவு முழுவதையும் பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து மக்களை கலைக்க பொலிஸார் உத்தரவிட்டனர்.
"ஒரே நாடு, இரு சட்டங்கள்" என்ற அடிப்படையில் ஹொங்கொங் பகுதியில் உள்ள சுதந்திர நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா இயற்றுவதாக சர்ச்சைகள் ஏற்கனவே கிளம்பின.
எனவே, சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, விமர்சனங்கள் எழுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களிடம் சீனா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவது முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், பிற நாடுகள் இதில் தலையிடக் கூடாது என்ற வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM