(இரா.செல்வராஜா)

மணல் மற்றும் மண் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்கான அனுமதியை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் வழங்குவதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தீர்மானித்துள்ளது.  

கடந்த சில மாத காலமாக மணல் மற்றும் மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. அத்துடன் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒப்பந்தக்காரர்களும் ஏனைய கட்டிட நிர்மானத்துறையினரும் மணல் இல்லாததால் தமது நிர்மானப் பணிகள் தாமதமடைவதாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இந்த நிலைமை குறித்து ஆராய்ந்த புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் மணல், மண் ஆகியவற்றை ஏற்றிச் செல்வதற்கான அனுமதியை லொறிகளுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றினை நாட்டின் சகல பிரதேச செயலாளர்களுக்கு புவிசரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் அனுப்பி வைத்துள்ளது.