காசாவில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

பாலஸ்தீனத்தில் காசா நகரில் 77 வயதுடைய பெண் வயோதிபர் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

காசாவில் 2 இலட்டசம் சனத்தொகையில், 55 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

சமீபத்திய நாட்களில் காசாவில், கடலோரப் பகுதிகளின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 20 க்கு மேல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முடிந்தது, மேலும் நோய் பரவாமல் தடுக்க, இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லைகள் மூடப்பட்டன.

காசாவில் பாடசாலைகளும் திருமண அரங்குகளும் மூடப்பட்டுள்ளன. புனித ரமழான் மாதத்தைக் குறிக்கும் முக்கிய விடுமுறை தினமான ஈதுல் பித்ரின் போது பொது மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஹமாஸின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Photo credit; Reuters