மன்னாருக்கு நேற்று சனிக்கிழமை (23.05.2020) விஜயத்தை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை மாலை 5 மணியவில் மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நாட்டின்  சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் மன்னார் மறைமாவட்டத்தில் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும் அமைச்சர் ஆயரிடம் கேட்டறிந்து கொண்டார். இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.