சுன்­னாகம் பகு­தியில் நிலத்­தடி நீர் பெற்­றோ­லிய பொருட்­க­ளாலோ அல்­லது பார உலோ­கங்­க­ளாலோ மாச­டைந்­துள்­ளன என்­ப­தற்­கான சான்­றுகள் எதுவும் இல்லை. எனினும் இந்த ஆய்வு சுன்­னாகம் முழு­வ­து­முள்ள நிலத்­தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்­ட­வட்­ட­மாகக் கூற­மு­டி­யாது என வட­மா­காண சபையால் சுன்­னாகம் நிலத்­தடி நீர் ஆய்வு தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட நிபுணர் குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­துள்­ளமை தொடர்பில் வட­மா­காண சபையால் நிபு­ணர்­குழு நிய­மிக்­கப்­பட்டு அந்த நிபு­ணர்­கு­ழு­வினால் சுன்­னாகம் நிலத்­தடி நீர் ஆய்­வுக்­குட்­ப­டுத்தி அதன் அறிக்கை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்­றைய தினம் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

கைய­ளிக்­கப்­பட்ட அறிக்­கை­யிலே மேற்­கண்ட விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

சுன்­னாகம் பகு­தியில் இயங்கும் மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளான நொதர்ன் பவர், உதுரு ஜனனி என்­பவை கார­ண­மாக நிலத்­த­டிநீர், எண்ணெய் கலப்­பினால் மாச­டைந்­தி­ருக்­கின்­றதா என்­பதை அறி­வ­தற்­காக ஒரு ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

குறிப்­பிட்ட பகு­தி­களை நேர­டி­யா­கச்­சென்று பார்­வை­யிட்டு சம்­பந்­தப்­பட்ட மக்கள் சமூக நீதிக்­கு­ழுக்கள் உட்­பட பல தரப்­பி­ன­ருடன் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட பின்னர் கிர­ம­மாக செய்­வ­தற்­கு­ரிய ஆய்­வுகள் திட்­ட­மி­டப்­பட்­டன.

இத­னி­டையே பொது மக்­க­ளினால் தொட­ரப்­பட்ட வழக்­கை­ய­டுத்து நீதி­மன்ற தடை­யுத்­த­ரவின் படி நொதர்ன் பவர் மின் உற்­பத்தி நிலையம் மின் உற்­பத்தி நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்­தி­யது.

மின் உற்­பத்தி நிலை­யங்­களை மைய­மாகக் கொண்டு 200 மீற்றர் இடை­வெ­ளியில் ஒன்­றுக்கு வெ ளியே இன்­னொன்­றாக அடுத்­த­டுத்து வரை­யப்­பட்ட2 கிலோ மீற்றர் வரை­யி­லான வட்­டங்­களை தொடர்­பு­ப­டுத்தி எட்­டுத்­தி­சை­க­ளிலும் நேர்­கோ­டாக வரை­யப்­பட்ட ஆரை­களில் வட்ட _ ஆரை சந்­தி­களில் கிணற்று நீர் மாதி­ரிகள் ஆய்­வு­கூட சோத­னை­க­ளுக்­காக எடுக்­கப்­பட்­டன. மேலும் மின்­பி­றப்­பாக்கி நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் சந்­தே­கிக்­கப்­பட்ட ஏழு இடங்­களில் மண் மாதி­ரிகள் ஆரா­யப்­பட்­டன.

இம்­மா­தி­ரி­களில் கொழுப்புஇ எண்ணெய்இ திரள்­கொ­ழுப்பு (கிறீஸ்) ( FOG (Fat, Oil, Grease) முத­லிய பதார்த்­தங்கள் இருப்­பதை அறி­வ­தற்­காக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் ஐ.ரி.ஐ. (ITI) நிறு­வ­னத்­திலும் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. மேலும் பார உலோ­கங்கள் மற்றும் நீரின் தரத்தை வெளிப்­ப­டுத்தும் அள­வீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இதற்­காக நீரின் மேல் பகு­தி­க­ளிலும் அடிப்­ப­கு­தி­யிலும் உள்ள பென்சீன், தொலியின், ஈதைல் பென்சீன் சைலீன் (BTEX பீரெக்ஸ்) இர­சா­யன பதார்த்­தங்­களைக் கண்­ட­றி­வ­தற்­காக ப்றொக் _ 4000 (FROG _ 4000) எனும் கரு­வியும் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. நீரின் மாதி­ரிகள் முன்பு குறிப்­பிட்ட வட்ட_ ஆரை சந்­தி­களில் இருக்கும் கிண­று­க­ளி­லி­ருந்தே எடுக்­கப்­பட்­டன.

மேலும் தேசிய கட்­ட­ட­ஆய்வு நிறு­வ­னத்தின் (NBRO) உத­வி­யுடன் நிலக்கீழ் ஊடு­ருவும் கதிர் வீச்சு (GPR -_ Ground Penetrating Radar) ஆய்­வுகள் மூலம் நிலப்­ப­ரப்பின் கீழ் மட்­டங்­களில் எண்ணெய்க் கலப்பு சாத்­தி­யங்­களைக் கண்­ட­றியும் புவியின் பௌதீகத் தன்மை குறித்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

மேலும் நிலத்­திலும் நீரிலும் கண்­ட­றி­யப்­பட்ட எண்ணெய் தொகு­தி­க­ளுக்கும் மின் உற்­பத்தி நிலை­யங்­களில் பாவிக்­கப்­படும் உராய்வு எண்ணெய், எரி­பொருள் மற்றும் வெளி­யேற்­றப்­படும் கழிவு எண்ணெய் முத­லி­ய­வற்­றுக்கும் இடை­யே­யான தொடர்பைக் கண்­ட­றி­வ­தற்­காக ஐ.ரி.ஐ. (ITI)  நிறு­வ­னத்தால் வாயு நிறப்­ப­கு­வியல் (GC (GAS Chromatography)  ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆரம்ப பரி­சோ­த­னை­களில் மிக அதி­க­ளவில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) காணப்­பட்ட பன்­னி­ரண்டு கிண­று­களில் நீர்­மா­தி­ரிகள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்­கை­யர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்டு மொத்த ஐதரோ காபன்கள் அடங்­கிய நீரின் பல்­வேறு தன்­மைகள் ஆரா­யப்­பட்­டன.

ஐ.ரி.ஐ. (ITI) நிறு­வன முடி­வு­க­ளின்­படி ஆய்வு செய்­யப்­பட்ட 82 மாதி­ரி­களில் 13 மாதி­ரி­களில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) அளவு ஆகக்­கூ­டிய அனு­ம­திக்­கப்­பட்ட அள­வான 2 மி.கி.ஃ லீட்டர் ஐ விட அதி­க­மாக காணப்­பட்­டது.

ஆனால் யாழ். பல்­க­லைக்­க­ழக மற்றும் ஐ.ரி.ஐ. நிறு­வ­னங்­களால் ஆய்வு செய்­யப்­பட்ட மேற்­கு­றிப்­பிட்ட கிணற்று நீர் மாதி­ரி­களை ஆய்வு செய்த அவுஸ்தி­ரே­லிய அமைப்பின் ஆய்­வு­க­ளின்­படி எந்த மாதி­ரி­க­ளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG)கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. யாழ். குடாவின் தென்­ம­ராட்சி, வட­ம­ராட்சி பகு­தி­களில் எடுக்­கப்­பட்ட நீர் மாதி­ரி­க­ளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) நியம அள­விலும் அதி­க­மாகக் காணப்­பட்­ட­தாக யாழ்ப்­பாண ஆய்வில் தெரி­ய­வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இவ் கொழுப்பு, எண்­ணெய்­திரள் கொழுப்பு(கிறீஸ்) (FOG) பரி­சோ­த­னை­களில் அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வு­முறை மிகவும் துல்­லி­ய­மா­னது.

எந்­த­வொரு மாதி­ரி­யிலும் பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன், சைலீன் (BTEX) அனு­ம­திக்­கப்­பட்ட ஆகக்­கூ­டிய அள­விலும் பார்க்க அதி­க­மாக காணப்­ப­ட­வில்லை. எனவே எந்த ஒரு கிணற்று நீர் மாதி­ரி­யிலும் தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய அளவில் பெற்­றோ­லிய பொருட்கள் இல்லை என்­பது புல­னா­கி­றது. அவுஸ்தி­ரே­லிய அறிக்­கையின் படி எந்த ஒரு நீர் மாதி­ரி­யிலும் பெற்­றோ­லிய மொத்த ஐத­ரோ­கா­பன்கள் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. மேற்­கூ­றப்­பட்ட பரி­சோ­தனை முடி­வு­களில் இருந்து நீர் மாதி­ரி­களில் காணப்­பட்ட கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) ஆனது பெற்­றோ­லிய பொருட்­க­ளுடன் சம்­பந்­த­மில்­லாத வேறு மூலங்­களில் இருந்து வந்­தி­ருக்­கலாம் என்­பது தெளி­வா­கின்­றது.

பார உலோ­கங்­களில் நாகம் மட்­டுமே அதுவும் அனு­ம­திக்­கப்­பட்ட அள­விலும் பார்க்க மிகவும் குறைந்த அள­வி­லேயே ஒரே ஒரு நீர் மாதி­ரியில் கண்­ட­றி­யப்­பட்­டது. ஐம்­பது வீத­மான நீர் மாதி­ரி­களில் நைத்­தி­ரேற்­றுகள் அனு­ம­திக்கக் கூடிய அள­வான 50 மி.கி.ஃ லீற்றர் அளவை விட அதி­க­மாக காணப்­பட்­டது. அவுஸ்தி­ரே­லிய ஆய்­வு­களின் படி 100மூ நீர் மாதி­ரி­க­ளிலும் கொலிபோம்இ ஈ.கோலை நுண்­ணு­யிர்கள் காணப்­பட்­டன. இது எல்லா கிணற்று நீரிலும் மலக் கழி­வுகள் கலந்­தி­ருக்­க­லா­மென குறிக்­கின்­றது.

நீரின் வன்மைத் தன்­மை­யா­னது 100% மான கிணற்று நீர் மாதி­ரி­க­ளிலும் நியம அளவை விட அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. குடா­நாட்டு புவி­யியல் தன்­மையில் சுண்­ணாம்புப் பாறைகள் செறிந்து காணப்­ப­டு­வதால் இம்­மு­டி­வுகள் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டி­ய­தொன்­றல்ல.

நிலக்கீழ் ஊடு­ருவும் கதிர்­வீச்சு (GPR) ஆய்வின் படி நிலத்தின் கீழ் பெற்­றோ­லிய மாசுகள் அண்­மைக்­கா­லங்­களில் ஏற்­பட்­ட­தற்­கான சாத்­தியம் குறை­வாக இருப்­ப­தா­கவே காட்­டு­கின்­றது. எனினும் விரி­வான ஆய்வு தேவை என பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது.

நொதர்ன் பவர் மின்­நி­லை­யத்தை அண்­மித்த நில மேற்­ப­ரப்பில் கழிவு நீர் எண்ணெய் விடப்­பட்­டதால் அவ்­வி­டத்தில் நிலம் எண்­ணெ­யினால் மாச­டை­வதை வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) ஆய்­வு­களும் சுற்­றாடல் கணக்­காய்­வு­களும் உறுதி செய்­கின்­றன. சில இடங்­களில் மண் மாதி­ரி­களில் காணப்­பட்ட எண்­ணெயின் நிறப்­ப­கு­வியல்  (GC) வரை­வுகளும் மின்­பி­றப்­பாக்­கியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட எண்ணெய் மற்றும் உராய்வு எண்­ணெய்­களின் வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) வரைவு­களும் ஒத்­தி­ருக்­கின்­றன. சந்­தே­கிக்­கப்­பட்ட ஒயில் குளம், எண்ணெய் சேமிப்பு தாங்­கிகள் முத­லான வேறு இடங்­க­ளிலும் 1- 2மீற்றர் வரை ஆழத்தில் நிலத்தில் எண்ணெய் கலந்து காணப்­ப­டு­கின்­றது. எனினும் ஆழ­மான பகு­தி­களில் காணப்­பட்ட எண்­ணெய்க்கும் தற்­போ­தைய மின்­பி­றப்­பாக்­கி­களில் இருந்து வெளிப்­படும் எரி­பொருள் எண்ணெய், உராய்வு காப்பு எண்­ணெய்க்கும் இடையே ஒற்­றுமை காணப்­ப­ட­வில்லை.

நில மட்­டத்­தி­லி­ருந்து 30 செ.மீ கீழ் மாச­டைந்­த­தாக கரு­தப்­பட்ட பகு­தி­களில் எடுத்த மண் மாதி­ரி­க­ளி­னதும் 2 மி.கி/ லீற்றர் அள­வுக்கு அதி­க­மாக எண்ணெய் இருந்து கிணற்று நீர் மாதி­ரி­க­ளி­னதும், ஜீ.சி. (G.C maps) வரை­வுகளில் 24.5 நிமிட சோதனை நேரத்தில் ஒத்த உயர்­வினை காட்­டின. இது இரு இடங்­க­ளிலும் ஒரே பதார்த்தம் இருப்­ப­தையோ அல்­லது வெவ்­வேறு மூலங்­களில் இருந்து அதே பதார்த்தம் உரு­வா­கி­யி­ருப்­ப­தையோ குறிக்­கலாம்.

எனினும் இவ்­வு­யர்வு (Peak) மின் பிறப்­பாக்­கி­களில் இருந்து வெளி­யே­றிய எரி­பொருள், உராய்­வுக்­காப்பு எண்ணெய், கழிவு எண்ணெய் என்­ப­வற்றை ஒத்து காணப்­ப­ட­வில்லை.

இவற்­றுக்கு உதுரு ஜன­னியை அண்­மித்த வெளி­க­ளிலும் கிணற்று நீரிலும் காணப்­பட்ட காபன் துகள்கள் ஒரு கார­ணி­யாக இருக்­கலாம். இவை மின்­பி­றப்­பாக்­கி­களின் புகை­யுடன் வெளி­வ­ரு­கின்ற நோர்வே நிபு­ணர்­களின் அறிக்­கையில், கிணற்று நீர் பரப்­புக்­களில் மிதந்த மினு­மி­னுப்­பான படலம் சுண்­ணாம்பு சார்ந்­தது என கூறப்­ப­டு­கின்­றது.

சந்­தே­கப்­பட்ட இடங்­க­ளி­லி­ருந்து எடுத்த மண் மாதி­ரி­களில் எண்ணெய் உயர்ந்த அளவில் காணப்­பட்­ட­தோடு மின்­பி­றப்­பாக்­கி­களின் எண்ணெய் மாதி­ரி­க­ளுடன் ஒத்­தி­ருந்­தது. எனினும் இவற்றில் பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன், சைலீன் (BTEX)  மிகக் குறைந்த அள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. எனவே, ஆய்வுக் கட்­டு­ரை­களில் குறிப்­பிட்­டி­ருந்­த­படி பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன் சைலீன் பீடெக்ஸ் (BTEX)  ஆனது எளிதில் ஆவி­யா­கு­மென்றோ எமது கால­நி­லை­களில் வெகு­வாக சிதை­விற்­குட்­படும் என்றோ ஏற்­க­வேண்­டி­யுள்­ளது.

இதி­லி­ருந்து பீடெக்ஸ் (BTEX) மண்­ணூ­டாக நிலத்­தடி நீரை சென்­ற­டையும் வாய்ப்­புக்கள் அரிது என்­பது தெளி­வா­கின்­றது. வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) மொத்த ஐதரோ கார்­பன்கள், பார உலோ­கங்கள், பீடெக்ஸ் அனைத்தும் இணைந்த ஆய்­வா­னதே நிலத்­திலும் நீரிலும் பெற்­றோ­லிய மாசை நிர்­ண­யிப்­ப­தற்கு பொருத்­த­மா­ன­தெனக் கூறலாம்.

இவ்­வாய்­வுகள் சுன்­னாகம் பகு­தியில் கிணற்று நீர் பெற்றோலிய பொருட்களாலோ அல்லது பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. எனினும் சுன்னாகம் நிலத்தடி நீரின் ஓட்டம் வேறுபட்ட தன்மைகள், பரப்பளவு என்பவற்றைக் கருத்தில் எடுக்கும் போது இந்த ஆய்வு சுன்னாகம் முழு நிலத்தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது.

முழுக்குடாநாட்டிற்கும் நிலத்தடி நீர் நிலைகள் குறித்த ஒரு முழுமையான விரிவான ஆய்வு திட்டமிடப்பட வேண்டும் என்பது முன்மொழியப்படுகின்றது. தொடர்ச்சியான நீர் ஆய்வுகள் செய்யக்கூடிய ஆய்வு நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவேண்டியது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது. நிலம், நீர் மாசடைவதை தவிர்க்கும் வகையில் பொது மக்களினதும் அரசஇ தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் இருக்கவேண்டியது முறைமையான நீர்முகாமைத்துவத்திற்கு அவசியமாகும். விரைந்து வருகின்ற காலநிலை மாற்றங்களுக்கும் கடல் மட்ட உயர்விற்கும் முகம் கொடுக்கக் கூடிய விதமாக இன்னும் சிறப்பான நீர் முகாமைத்துவம் இன்றைய அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.