இலங்கையில் மேலும் 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1085 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இற்றையதினம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 416 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 101 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை கொரோனாால் 9 பேர் மரணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.