அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஒரு பூனைக்குட்டி இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது 20 ஆம் திகதி இரவு ஒரு பூனைக்கு பிறந்த ஆறு பூனைக்குட்டிகளில் இந்த இரு முகங்களுடன் பிறந்த பூனைக்குட்டியும் ஒன்றாகும்.

அந்தப்பூனைக்குட்டிக்கு இரண்டு முகங்கள் இருப்பதால், பிஸ்கட்ஸ் மற்றும் கிரேவி என இரு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஆனால் சுருக்கமாக பிஸ்கட்ஸ் அழைப்பார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

தான் ஏதேனும் உணவு அளிக்கும்போது அது இரண்டு வாய்களையும் திறக்கும் என்கிறார் அந்தப் பூனைக்குட்டியின் உரிமையாளர்.

தற்போது நல்ல உடல்நலத்தோடு இந்தப்பூனைக்குட்டி இருந்தாலும், இதன் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இரண்டு முகங்களுடன் பிறந்த ஒரு பூனை ஜானஸ் பூனை என்று அழைக்கப்படுகிறது - இது ரோமானிய கடவுளான ஜானஸால் ஈர்க்கப்பட்ட பெயர், அவர் பெரும்பாலும் இரண்டு முகங்களைக் கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். உலகின் மிகவும் பிரபலமான இரு முக பூனை, ஃபிராங்க் மற்றும் லூயி (ஃபிராங்கண்லூய் என்றும் அழைக்கப்படுகிறது) ஒரு ராக்டோல். 

இது விலங்குகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும், "சோனிக் ஹெட்ஜ்ஹாக்" புரதத்தின் அதிகப்படியான செயற்பாடுகளால் உருவாகிறது.