நடிகர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இறக்கையில், அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநனயின் மனைவியும் மருத்துவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் தற்கொலை குறித்து பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.