(இரா.செல்வராஜா)

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததின் காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு மேல் சொந்த ஊருகலுக்குச் செல்லமுடியாமல் இருந்த சுமார் 1500 பேர் இன்று சனிக்கிழமை காலை அவர்களின் சொந்த ஊருகளுக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுகதாச விளையாட்டு அரங்கிற்கு அழைக்கப்பட்ட அவர்கள் வசித்த 16 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழி அனுப்பும் வைபத்தில் கலந்துக் கொண்டு சொந்தவூருகளுக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தினார்.