கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனாவிலிருந்து தப்பித்து முழு உலகமே போராடிவருகிறது. இந்நிலையில், இந்தியாவின் டெல்லி - ஜெய்ப்பூர் வீதியில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையை தாங்க முடியாத ஒருவர் சாப்பிட்ட காணொளி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் திகதி, காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். டெல்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், வீதியில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற நருகா, அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். இந்த காணொளியை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பேஸ்புக்கில், நருகா என்பவர் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்,

பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை வீதியில் பார்த்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலையளிக்கிறது. நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.