ஆசியாவிலிருந்து 2600 கோடி டொலர்களை மீளப்பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

23 May, 2020 | 08:19 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவான உலக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அபிவிருத்தியடைந்துவரும் ஆசிய பொருளாதாரங்களில் இருந்து 2600 கோடி டொலர்களும்  இந்தியாவில் இருந்து  1600 கோடிக்கும் அதிகமான  டொலர்களும்  மீளப்பெறப்பட்டதாக அமெரிக்க காங்கிரஸ் அறிக்கையொன்று கூறுகிறது.

உலக பொருளாதாரம் மீதான  கொவிட் - 19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து சுயாதீனமான காங்கிரஸ் ஆராய்ச்சி நிலையம் தயாரித்திருக்கும் இந்த அறிக்கை இவ்வாறு மூதலீடுகள் மீளப்பெறப்பட்டமை ஆசியாவில் பெரிய பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும் என்ற அசசத்தை அதிகரித்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் 3 கோடி மக்கள் அரசாங்க உதவிக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்கிற அதேவேளை, யூரோவலய பொருளாதாரம் 3,8 சதவீதத்தினால் சுருக்கம் அடைந்திருப்பதாக 2020 முதற்காலாண்டு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த வலயத்தின் காலாண்டு பொருளாதார வீழ்ச்சிகளில் இதுவே மிகப்பெரியதாகும் என்றும் அமெரிக்காவில் 2020 முதற்காலாண்டில் நிகர உள்நாட்டு உற்பத்தி 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது. உலக நிதி நெருக்கடியின்போது 2008 நான்காவது காலாண்டிற்கு பிறகு ஏற்பட்டிருக்கும்்மிகப்பெரிய காலாண்டு வீழ்ச்சி இதுவாகும் என்றும் காங்கிரஸ்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பு மருந்துகளைக் கண்டறிந்து தயாரிப்பதற்கும் சொந்தக் குடிமக்களைக் காப்பாற்றுவதற்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை,  கடன்  சந்தைகளுக்கும் நிலைபேறான பொருளாதார செயற்பாட்டுக்கும் ஆதரவாக அமையக்கூடிய நாணயக் கொள்கைகளையும் வருவாய்க் கொள்கைகளையும் அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு தொற்றுநோய் நெருக்கடி சவாலாக இருக்கின்றது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கொள்கைகளில் வேறுபாடுகள்

ஆனால், அவ்வாறு செய்யும்போது கொள்கை அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுகள் தேசியவாதத்தை ஊக்குவித்து வளர்க்கின்ற நாடுகளுக்கும்்ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறையை ஆதரிக்கின்ற நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைக் கசப்படையச் செய்கின்றன.

" அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களுக்கும் அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளையும் யூரோவலயத்தின் தென்பகுதி உறுப்புநாடுகளுக்கும் வடபகுதி உறுப்புநாடுகளுக்கும் இடையிலான உறவுகளையும்கூட கசப்படையச்செய்கின்ற கொள்கை வேறுபாடுகள் கூட்டணிகளுக்கு சவால்களைத் தோற்றுவிப்பதுடன் உலக தலைமைத்துவத்தின் எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் கிளப்புகின்றது.

" கொரேனாவைரஸின் விளைவாக அனேகமாக சகல பிரதான பொருளாதாரங்களும் சுருங்கிக்கொண்டருக்கின்ற அதேவேளை, சீனா, இந்தியா, இந்தோனேசியா என்ற மூன்று நாடுகள் மாத்திரமே 2020 பொருளாதார வளர்ச்சி வீதத்தில் சிறிய ஆனால் நேர்மறையான அனுபவத்தை வெளிக்காட்டும் என்று மதிப்பிடப்படுகிறது " என்றும் காங்கிரஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் பலவீனமடையலாம்

 "உலக பொருளாதார மீட்சி அனுமானிக்கப்பட்டிருப்பதையும் விட பலவீனமானதாக இருக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் அதன் அண்மைய அறிக்கையொன்றில் கூறியிருந்தது. தொற்றுநோய் பலவல் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடிய சாத்தியங்கள் குறித்து நீடிக்கும் நிச்சயமற்றதன்மை, நம்பிக்கையின்மை, பல தொழில்நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படலாம் என்ற  அச்சம், நிறுவனங்களிலும் வீடுகளிலும் மக்களின் நடத்கைளிலும் பழக்கவழக்கங்களிலும் ஏற்பட்டிருககும் மாற்றம் ஆகியவற்றை காரணங்களாகவும் நாணய நிதியம் சுட்டிக்காட்டியது.

சொற்ப எண்ணிக்கையான விமானசேவைகளே நடத்தப்டுவதால் 430 கோடி டொலர்கள் வருவாய்  இழப்பு தங்களுக்கு ஏற்படக்கூடும் என்று ஐரோப்பிய விமானநிலையங்கள் மதிப்பிட்டிருக்கின்றன.பெரும் எண்ணிக்கையான நாடுகளினால் விதிக்கப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளின் விளைவாக தற்போதைய சூழ்நிலைகளின்  கீழ் பல விமானசேவைகள் வங்குரோத்து அடையும் என்று அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.

சீன சுற்றலாப்பயணிகளின் இழப்பு ஆசியாவிலும் வேறு பாகங்களிலும்  உள்ள நாடுகளுக்கு பொருளாதார ரீதியான இன்னொரு தாக்கமாகும்.

 கைத்தொழில்துறை செயற்பாடுகளின் வீழ்ச்சி மசகு எண்ணெய் போன்ற சக்திவள உற்பத்திகளின் தேவையைக் குறைத்திருப்பதால், விலைகளில் மேலும் வீழ்ச்சி ஏற்படும்.இதனால் சக்திவள உறபத்தியாளர்களும் எலெக்ரிக் வாகன தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படுவர்.ஆனால், இந்த விலை வீழ்ச்சி பொதுவில் பாவனையாளர்களுக்கும் தொழில்முயற்சியாளர்களுக்கும் சாதகமாக அமையும்.

மேலும், சீனாவில் கைத்தொழில்துறை செயற்பாடுகளின் சீர்குலைவு கம்பியூட்டர்கள், ஙெல்போன்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதியில் தாமதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் 2020 முதல் மாதங்களில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

சீன விவசாய ஏற்றுமதிகளின் குறைப்பு சில பாவனைப்பண்டங்களின் தட்டுப்பாட்டு்க்கு வழிவகுக்கும்.மேலும் பெருமளவான வாகன உற்பத்தியாளர்கள் சீனாவில் இருந்து பெறப்படுகின்ற உதிரிப்பாகங்களுக்கும் ஏனைய விநியோகங்களுக்கும் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவார்கள் என்றும் காங்கிரஸின் அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49