ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் அதிகளவில் பாதிக்கவில்லை. இது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை மருத்துவ நிபுணர்கள் அளித்திருக்கிறார்கள். 

இது தொடர்பாகமருத்துவ நிபுணர்கள் மேலும விளக்கமளிக்கையில்

,“ பெரியவர்களை விட சிறார்களுக்கு மூக்கின் உட்பகுதியிலுள்ள ஏஸ் ரிசெப்டார் ( ace2 receptor) எனப்படும் மரபணு சார்ந்த செல்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாலும், அவர்களின் உடலில் போதிய அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாலும் எளிதில் தொற்றிற்கு ஆளாவதில்லை.

அதே தருணத்தில் மூக்கின் உட்பகுதியில் உள்ள இந்த ஏஸ் ரிசெப்டார்  எனும் மரபணு செல் வயது கூட கூட, அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் சிறார்கள் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை விரைவாக தீவிர சிகிச்சையளித்து குணப்படுத்த இயலுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் சிறார்களுக்கு, அவர்களின் வாய், மூக்கு ஆகிய இரண்டு பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்தத் தொற்று பரவுவதை தடுக்கலாம்.

அதேபோல் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு இனிப்பு ஒரு முக்கிய பொருளாக இருப்பதால், சிறார்களுக்கு இந்த காலகட்டத்தில் இனிப்பை தவிர்த்துவிடுங்கள். அதையும் கடந்து, அவர்கள் பிடிவாதம் பிடித்து இனிப்பை கேட்டால்.., அதனை சாப்பிட்ட பிறகு உப்பு கலந்த நீரில் வாயைக் கொப்பளிக்க சொல்லவேண்டும்.

வாய், மூக்கை தவிர சிலருக்கு ககொரோனா வைரஸ் கிருமி, தொண்டையில் இறங்கி வயிற்றில் வயிற்றுக்கு செல்லக்கூடும். இந்த தருணத்தில் ஜீரண மண்டலத்தில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருந்தால்... இந்த கொரோனா தொற்று வைரஸ் விரைவில் அழிந்துவிடும். அதற்கு வீட்டிலேயே உறையவைத்த தயிர், தோசை, இட்லி மாவு போன்றவற்றில் நல்ல பாக்டீரியா அதிகம். இதனை உணவாக கொடுக்கலாம்.

இதனையும் கடந்து கோடைகாலம் என்பதால் உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகிறது. நீர் சத்து போதுமான அளவு இருந்தால்தான், எம்முடைய உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இதற்காக தாகம் எடுக்கும் போதெல்லாம், போதுமான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். அதையும் கடந்து ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால்.. அவர்களுக்கு வெந்நீர் தரலாம். அதன் பிறகு எலுமிச்சை, ஒரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா போன்ற விற்றமின் சி சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம், வைரஸ் பரவுவது நேரடியாகத் தடுக்கப்படும். இவற்றையெல்லாம் பயன்படுத்துவதற்கு அல்லது அவர்களிடமிருந்து இதற்குப் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மில்க் ஷேக், ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து கொடுத்தால் போதும். எந்தத் தொற்றும் தாக்காது.

டொக்டர் சந்தோஷ்

தொகுப்பு அனுஷா.