காணியில் மர்மப்பொருள் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு : பலத்த பாதுகாப்புடன் தோண்டிய படையினருக்கு கிடைத்த பொருள்

Published By: J.G.Stephan

23 May, 2020 | 04:34 PM
image

ஓமந்தை - கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலுக்கமைய இன்றையதினம் பாரியளவிலான தேடுதல் ஒன்று நடாத்தப்பட்டது.



குறித்த காணியில் சிலமாதங்களுக்கு முன்னர் இனம் தெரியாத நபர்களால் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளது.

பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபர் ஒருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.



அதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார், நீதிமன்ற அனுமதியுடன் இன்றையதினம் காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.



இதன்போது 16அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறியகுடத்துடன் தகடு ஒன்றை தவிர வேறு எதுவும் கிடைக்காத நிலையில் தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டிருந்தது.  



இந்நிலையில் குறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா  பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள், கிராமசேவையாளர், முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46