ஊரடங்குச் சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

23 May, 2020 | 03:05 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பதோடு, நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று சனி கிழமை இரவு 8.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய் கிழமை அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்படும்.

இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தினமும் இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் இன்றும் நடைமுறையில் இருக்கும் அதேநேரம் 26 ஆம் திகதி செவ்வாய் முதல் முன்னர் போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஊரடங்கு சட்டத்துடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15