அவதானம் ! குழந்தைகள் மத்தியில் ஏற்படும் புதிய வகை நோய் !

Published By: Digital Desk 3

23 May, 2020 | 02:11 PM
image

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் எனவே பெற்றோர்கள்  மற்றும் பாதுகாவலர்கள் தமது குழந்தைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்த கவாசாகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் ஏற்படுதால் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சீமாட்டி குழந்தைகள் வைத்தியசாலையின் (Lady Ridgeway Hospital for Children) விசேட வைத்திய நிபுணர்  தீபல் பெரேரா கூறுகையில், 

இந்த நோய் ஏற்கனவே இருந்தாலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் மேற்கத்தேய நாடுகளில் வேகமாக ஏற்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது இலங்கையில் குறித்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் இங்கும் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

மனித உடலில் குருதியைக்கொண்டு செல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது. அதனால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும் போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.

இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுவாக இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல் ஏற்படுகின்றதாகவும் பின்னர் நாக்கு சிவந்து, ஸ்ட்ராபெரி போன்று தோற்றமளித்தல், தோலில் ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள் , தோல் உரிதல், உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல், அத்துடன் கழுத்தில் ஒரு வகை சொறி போன்று உருவாகும். இவை கவாசாகி நோய் அறிகுறியாக இருக்கலாம்.

குறிப்பாக இந்த நோய் 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே பெரும்பாலும் பாதிக்கின்றது.

எனவே இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்தியர் நிபுணரிடம் ஆலோசனை பெறுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் பரவும் அச்சுறுத்தலில் இவ்வாறான நோய் மேற்கத்தேய நாடுகளில் பரவுவதனால், குழந்தைகளை கூடுதலாக கவனித்துக்கொள்ளும்படி வைத்தியர்கள் பெற்றோரை கேட்டுக்கொள்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10