வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 8 கைதிகள் உயிரிழந்தனர்.

மெக்சிக்கோவின் மத்திய மாநிலமான ஜலிஸ்கோவிலுள்ள  சிறைச்சாலையில், கைதிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த போது மோதல் மூண்டதில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 4 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை, படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.

மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறையில் இருந்து 2 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.