சீனாவில் முதல் முறையாக நேற்று எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டவில்லை  சீனா தெரிவித்துள்ளது.

28 புதிய அறிகுறியற்ற நோயாளிகள் தனித்தனியாக கணிக்கப்படுகின்றனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 கொரோனா வைரஸ் சீனாவில் ஹூபே மாகாணத்தில் வுஹான் நகரில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக பரவத் தொடங்கியது. பின்னர் முழு உலகமும் பரவி பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 இலட்சத்தை நெருங்கி வருகிறது. 

இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக 82,971 பேர் பாிக்கப்பட்டுள்ளதுடன், 4,634 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 78,258 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo credit : AFP