நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.



எவ்வாறாயினும் நாட்டில் கொரோனா தொற்று நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நேற்று(22.05.2020) மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.