தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் முதியவர் ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

தலவாக்கலை நகரிலிருந்து   லிந்துலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று தலவாக்கலை ஹட்டன் நஷனல் வங்கிக்கு அருகிலுள்ள  பாதசாரி கடவையை கடந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியதன் காரணமாக குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் மோதிய நபர் சுமார் 15  அடி தூரத்திற்கு வீசப்பட்ட நிலையில் அவர் பேச்சு மூச்சு இல்லாத நிலையில் அவசர அம்பியூலன்ஸ் வாகனத்தில் ஏற்றி லிந்துலை வைத்தியசாலையில் நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. 

இருப்பினும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் மோட்டார் சைக்கிளில் மோதிய முதியவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு  அனுப்பியுள்ளதாக லிந்துலை வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

விபத்து சம்பவித்த பாதசாரி கடமைக்கு அருகாமையிலேயே மதுபானசாலை ஒன்று அமைந்துள்ளது . இதற்கு முன்பும் பல விபத்துக்கள் இப்பாதசாரி கடவையில் நடைபெற்றுள்ளதோடு, குறித்த  மதுபானசாலையிணை குறித்த இடத்திலிருந்து அகற்றுமாறு பல அரச அதிகாரிகளிடம் பல சந்தர்ப்பங்களிலும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்த போதிலும் இன்றுவரை மதுபானசாலை அவ்விடத்திலிருந்து அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.  அதேபோல் குறித்த மதுபானசாலைக்கு எதிரே சுமண மத்திய கல்லூரியும் அமையப்பெற்றுள்ளன குறிப்பிடத்தக்கது. 

மோட்டார் சைக்கிளில் செலுத்திய நபர் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் உறுப்பினர் ஒருவரின் மகன் என்பதும் குறித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு இன்றி பயணித்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.