லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன் படி ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 137 ரூபாவென லங்கா ஐ.ஓ.சி. அறிவித்துள்ளது.

குறித்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல்  அமுலாகும்.

கடந்த வரமளவில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலையை 5 ரூபாவால் அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் 5 ரூபாவால் குறைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.