(க.கமலநாதன்)

எமது நாட்டில் புதிதாக அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டமூலங்களுக்கு அமைவாக, எமது நாட்டில் மாநில ஆட்சி உருவாகும். அதனை தடுக்கும் சக்தியற்றவர்களாக எமது தலைமைகள் மாறுவர் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

காணாமல் போனவர்களுக்கான நீதி தேடும் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதனூடாக இராணுவ பழிவாங்கல் செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும்  அவர் குற்றம் சுமத்தினாரர்.

கோட்டேயில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.